About The Project

வணக்கம்,

திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் நமக்கு அருளிய பெரும் கொடையாகிய சன்மார்க்கத்தை அவரின் நூல்களாகிய திருஅருட்பா மற்றும் உரை நடைப்பகுதி ஆகியவற்றின் மூலமாகவே நாம் உணர இயலும்.
அந்த வகையில் திருஅருட்பா ஆறு திருமுறைகளும் ஒருவாறு காலத்திற்கு ஏற்ற வகையில் இசைப்பாடல்களாவும் (Thiru Arutpaa Songs avilable in thiruarutpa.org can download this free of cost), குருந்தகடுகளாகவும் வெளிவந்துள்ளது நாம் அறிந்ததே அந்த வகையில் உரைநடைப்பகுதியை அனைவரும் கேட்கும் வண்ணமும், இன்றைய அறிவியல் சாதனங்களை கொண்டு தினவும் அதைப்பயன்படுத்தும் விதமாகவும் திருஅருட்பா உரை நடைப்பகுதியை ஒலி வடிவத்தில் மாற்றும் பணியை துவங்கத் திட்டம் இட்டு உள்ளோம்.


இதற்கான பூர்வாங்கப்பணிகள் நடைபெற்றுக்கொண்டுள்ளது. இந்த பகுதியில் முன்னமே இவ்வாறு
ஒலி வடிவில் மாற்றப்பட்ட சில பகுதிகளியும் நாங்கள் இணைத்துள்ளோம்.

முன்னர் ஒலி வடிவில் உள்ள பகுதிகள்:

1. ஜீவகாருண்ய ஒழுக்கம் 3 பகுதி/பேருபதேசம்/ நான்கு ஒழுக்கம் ‍‍= திரு பெங்களூர்முருகன் அய்யா அவர்களின் ஆக்கம்

2. விண்ணப்பங்கள்/ அறிவிப்புகள்/அழைப்புகள்/கட்டளைகள்/ நித்திய கருமவிதி ‍= பெங்களூர் வள்ளலார் குரூப் கார்த்திகேயன் ஆக்கம்.

இவைத்தவிர எதாவது மற்ற திருஅருட்பா உரை நடைப்பகுதிகள் (மூல உரைநடைப்பகுதிகள் மட்டும்) ஒலி வடிவில் இருந்தால் கீழ்க்கண்ட எண்ணுக்கு தகவல் தரலாம் அல்லது இங்கேயும் தெரிவிக்கலாம்.
இந்த திருஅருட்பா உரை நடைப்பகுதிகள் ஒலி வடிவ திட்டத்திற்கு, பொருள் மற்றும் அன்பர்களின் அறிவு சார்ந்த உதவிகளும் தேவைப் படுகின்றது,

சன்மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாடு உடைய அறிவு நிறைவுடையோர் இப்பணிக்கு உதவலாம்,

நன்றாக குரல்வளமும், தமிழ் உச்சரிப்பு உடையவர்கள், பிழை திருத்தம் செய்ய வல்லமை உள்ளவர்களும் உதவலாம் தங்களின் ஆலோசனைகயும் வழங்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் திருஅருட்பா உரை நடைப்பகுதிகளை படிக்க விருப்பம் உள்ளவர்கள், தங்களின் குரலில் ஏதாவது ஒரு உரை நடைப்பகுதியைப் வாசித்து பதிவு செய்து கீழ்க்கண்ட எண்ணுக்கு அனுப்பலாம்.

இப்பணி நிறைவுற்ற பின் அனைத்து ஒலிவடிவங்களும் Vallalarspace.org மற்றும் thiruarutpa.org இல் பதிவேற்றம் செய்யப்படும் அதை அன்பர்கள் அனைவரும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இப்பணி இனிதே தொடங்கி, நிறைவுற வள்ளல் பெருமான் திருவருள் செய்வாராக!

தொடர்புக்கு: 09880231389/ 07411275938

நன்றி.

No comments:

Post a Comment